Mooligai maruthuvam

Aloe Vera - கற்றாழை காயகற்ப மூலிகை, Mooligai maruthuvam,Madurai Local Directory

Aloe Vera - கற்றாழை காயகற்ப மூலிகை

Aloe Vera: Uses & Benefits (Tamil) கற்றாழை

Health benefits of aloe vera
கற்றாழை (Aloë vera): பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். தமிழில் இந்தத் தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது.
கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பிரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர். கற்றாழையின் இலையில் ‘அலோயின்’, ’அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது.
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

காயங்கள்

கற்றாழையில் ஆன்டி-செப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. அதனால் காயங்கள், புண்கள் மற்றும் பூச்சிக் கடிகள் போன்றவற்றிற்கு இதனைப் பயன்படுத்தலாம். அதற்கு இந்த செடியின் உட்புறத்தில் உள்ள ஜெல் போன்ற பகுதியை காயம் பட்ட இடத்தில் தடவ வேண்டும். இது எரிச்சலை குறைத்து புண்களை செரிசெய்யும்.

மலச்சிக்கல்

கற்றாழையில் உள்ள நார்ச்சத்துக்கள், மலச்சிக்கலை நீக்கி செரிமானத்திற்கு உதவும். அதிலுள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். மேலும் இது மலச்சிக்கல் ஏற்படும் போது, அதனால் உண்டாக்கும் எரிச்சலையும் நீக்கும்.

முகப்பருக்கள்

கற்றாழையை பருக்களை நீக்க பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழையை கொண்டு பருக்களை முழுமையாக நீக்க முடியாது. அழற்சியையும், சருமம் சிவந்திருப்பதையும் தடுக்கலாம். மேலும் பருக்கள் உடைவதையும் தடுக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அது சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமாக வைத்து அதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் செயல்பாடுகள் மூலம் சருமத்தை இளமையாக மாற்ற உதவுகிறது.

சரும திசுக்களை

கற்றாழை குளிர்ச்சி ஏற்படுத்தும் செடியாக விளங்குவதால், எரிச்சல்கள் மற்றும் வெந்த புண்களுக்கு அதனை பயன்படுத்தலாம். இது சரும திசுக்களை வேகமாக சரிசெய்து அணுக்களை புதுப்பிக்க உதவும். அதனால் பாதிப்படைந்த திசுக்கள் மீண்டும் சீரமைக்கப்படும்.

கற்றாழை எப்படித் தயார் செய்வது?

நான்கு ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் அத்தனை சத்துகளும் பொதிந்திருக்கும். அவற்றை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். கற்றாழைச் செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்கள் முதிர்ச்சி அடைந்திருக்கும். அவற்றை நறுக்கி எடுத்து, அதிலுள்ள மஞ்சள் நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும். பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும். ஏழு முறை கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும். இல்லாவிட்டால் அது வயிற்றின் உள்ளே செல்லும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சல் உண்டாகும். மேலும் ஏழுமுறை கழுவினால்தான், கற்றாழையின் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும்.

கற்றாழை ஜூஸ்!

1. காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அப்போது சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நல்லது.
2. காலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிப்பது நல்லது.
3. கற்றாழைச் சாற்றுடன் பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடித்தால் எந்த மருத்துவத்துக்கும் அசராத வறட்டு இருமல் நம்மை விட்டு வேகமாக விலகும்.
4. நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துக் குடித்தால் மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
5. மோர் சேர்த்துக் குடித்தால் உடல் சூடு தணியும். இது வெயில் காலத்தின் அமுது. வெயிலால் தோலுக்கு உண்டாகும் ஒவ்வாமை மற்றும் முகத்தில் வரக்கூடிய கருந்திட்டுகள் நீங்கும்.
6. கற்றாழையுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சிச் சாறு சேர்த்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். உடலில் உள்ள கொழுப்பு கரையும், பித்தமும் குறையும்.
7. பசுந்தயிரை மோராக்கி அதனுடன் சிறிது உப்பு, பெருங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்துக் கற்றாழை ஜெல்லை கலந்து மிக்ஸியில் அடித்துக் குடிக்கலாம்.
தயாரித்த அரை மணி நேரத்துக்குள் ஃப்ரெஷ்ஷாகக் குடித்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கற்றாழை ஜூஸ் குடித்த ஒரு மணி நேரம் வரை வேறு எந்த உணவும் உண்ணாமல் இருப்பது நல்லது. கற்றாழை ஜூஸை மாலை நேரங்களிலும் குடிக்கலாம்.

புற்று நோய்க்கு கற்றாழை

கற்றாழை நச்சுத்தன்மைகளை எதிர்த்து போராடி அவற்றை அழிப்பதில் சிறப்பாக செயலாற்றுகிறது. மனிதர்களுக்கு பல காரணங்களால் அவர்களின் உடலில் உண்டாகும் புற்று நோய் செல்கள் மீண்டும், மீண்டும் வளரக்கூடியவை. இத்தகைய தீமையான செல்களை அழித்து, ஆரோக்கியமான செல்களை உடலில் வளர்ச்சி பெற செய்யும் ஆற்றல் கற்றாழைக்கு உண்டு. எனவே புற்று நோய் ஏற்படாமல் தடுக்க நினைப்பவர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கற்றாழையை மருத்துவ உணவாக பயன்படுத்துவது நல்லது.

புற்றுநோயை குணப்படுத்த...

இம்மருந்தை எப்படி தயாரிப்பது...

● சோற்றுக் கற்றாழை 400 கிராம்
● சுத்தமான தேன் 500 கிராம்
● Whisky (or) Brandy 50 மில்லி

தயாரிப்பு முறை:

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.

தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ள வேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15மிலி வீதம் உண்ணவேண்டும்.

ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும். பத்து நாட்களுக்கு மேல் மருந்தை சேமிக்க செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும்.

சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது. இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.

மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றுப் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது.

சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக, புகைப் பழக்கத்தை நிறுத்தி, இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.


Hits: 976, Rating : ( 5 ) by 10 User(s).